பொருளாதார ஆய்வறிக்கை 2013-14: நிர்வகிக்கக்கூடிய வரையறைக்குள் வெளிநாட்டுக் கடன்கள்

பொருளாதார ஆய்வறிக்கை 2013-14: நிர்வகிக்கக்கூடிய வரையறைக்குள் வெளிநாட்டுக் கடன்கள்
Updated on
1 min read

நாட்டின் வெளிநாட்டுக் கடன்களின் அளவு நிர்வகிக்கக்கூடிய வரையறைக்குள் இருப்பதாகவும், வெளிநாட்டுக் கடன் நிர்வாக கொள்கையின் வாயிலாக இது சாத்தியமாகயிருப்பதாகவும் 2013-14 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆண்டுதோறும் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாளன்று பொருளாதார ஆய்வறிக்கையை (Economic Survey) மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். இதன்படி இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

அதில், 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இந்தியாவின் வெளிநாட்டு கடன்களின் அளவு 404.9 மில்லியன் டாலராக இருந்தது. (ரூ.2,200,410 கோடி). இது சென்ற ஆண்டு அளவைவிட 12.2 சதவிகிதம் அதிகமாகும்.

2013 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாத முடிவில், வெளிநாட்டு கடன்களின் அளவு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அளவுகளைவிட கூடுதலாகும்.

நாட்டின் வெளிநாட்டுக் கடன்களின் அளவு நிர்வகிக்கக்கூடிய வரையறைக்குள் இருக்கிறது. வெளிநாட்டுக் கடன் நிர்வாக கொள்கையின் வாயிலாக இது சாத்தியமாகயிருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in