

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) வியாழக்கிழமை 3 மணி நேரம் முடங்கியது. காலை 9.35 மணியிலிருந்து வர்த்தகம் செய்ய முடியவில்லை.
நெட்வொர்க் பிரச்சினை காரண மாக வர்த்தகம் தடைப்பட்டது. அதனால் பாம்பே பங்குச்சந்தை தன்னுடைய அனைத்து வர்த்த கங்களையும் நிறுத்தியது என்று அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் ஏற்கெனவே புக் செய்த ஆர்டர்களும் ரத்து ஆகிவிட்டன என்றும் அவர் தெரிவித்தார். பங்குச்சந்தை மட்டுமல்லாமல் கரன்சி சந்தை உள்ளிட்ட அனைத்து சந்தைகளின் வர்த்தகமும் நிறுத்தப்பட்டது.
கடந்த இரண்டு மாதத்தில் தொழில்நுட்ப கோளாறு காரண மாக வர்த்தகம் பி.எஸ்.இ.-யில் தடைபடுவது இது இரண்டா வது முறையாகும். கடந்த ஜூன் 11-ம் தேதியும் இதேபோல தடைப்பட்டது. அப்போது 20 நிமிடங்கள் வரை தகவல்கள் சரியாக கிடைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 7 மற்றும் 9ம் தேதியும் தகவல்கள் சில நிமிடங்கள் வரை அப்டேட் செய்யப்படவில்லை.
பி.எஸ்.இ. தடைப்பட்ட அதே நேரம் தேசிய பங்குச்சந்தையில் எந்தவிதமான கோளாறும் இல்லா மல் வர்த்தகம் நடைபெற்றது. பி.எஸ்.இ.யின் தொழில் நுட்பத்தை அளிக்கும் நிறுவனமான ஹெச்.சி.எல். இதை சரிசெய்தது. சுமார் 3 மணிநேரத்துக்கு பிறகு சுமார் 12.45 மணி அளவில் வர்த்தகம் நடக்க ஆரம்பித்தது.
இதற்கிடையே பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, இது குறித்து விளக்கம் அளிக்க சொல்லி பாம்பே பங்குச் சந்தையிடம் கேட்டிருக்கிறது. பங்குச்சந்தையில் ஏற்றம் அதிக ரித்து வரும் நிலைமையில் இப்படி வர்த்தகம் தடைப்பட்டதால் வருமானம் 67 சதவீதம் சரிந்தது.
லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு முதலீட்டாளர்களிடம் அதிகம் இருந்ததால் வியாழன் அன்று வர்த்தகம் சிறிதளவு சரிந்து முடிந்தது. சென்செக்ஸ் 17 புள்ளிகள் சரிந்து 25823 புள்ளியிலும், நிஃப்டி 10 புள்ளிகள் சரிந்து 7714 புள்ளியிலும் முடிவடைந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் சரிவுடன் முடிவடைந்தன. ஆனால் பாம்பே பங்குச்சந்தை வர்த்தகத்தின் இடையே 25999 புள்ளிகள் என்ற அதிகபட்ச புள்ளியை தொட்டது.
ஹெல்த்கேர், ஆட்டோ, கன்ஸ்யூமர் டியுரபிள் ஆகிய துறைகளில் முதலீட்டாளர்களி டையே வாங்கும் போக்கு அதிகமாக இருந்தது. ஆனால் மெட்டல், வங்கி, எண்ணெய் எரிவாயு ஆகிய துறை பங்குகளில் விற்கும் போக்கு இருந்தது. இதற்கிடையே மும்பை பங்குச்சந்தையில் 450 பங்குகள் தன்னுடைய 52 வார உச்சபட்ச விலையைத் தொட்டன.