

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலராக(சி.டி.ஓ) கோபிசந்த கட்ரகட்டா (Gopichand Katragadda) நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனம் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்திரியின் நேரடி கட்டுப்பாட்டில் இவர் செயல்படுவார்.
டாடா குழுமத்தின் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைகளுக்கு இவர் பொறுப்பேற்பார். இதற்கு முன்பு ஜி.இ. இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநாராக இவர் பதவி வகித்தார். எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங்கில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர்.