Published : 16 Jul 2014 10:00 AM
Last Updated : 16 Jul 2014 10:00 AM

இன்சுலின் வாலெட்: பிரையோ அறிமுகம்

மும்பையைச் சேர்ந்த ஃபிரையோ நிறுவனம் இன்சுலின் வாலெட்களை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் மருந்து குப்பிகளை எடுத்துச் செல்வது வழக்கம். இருப்பினும் இந்த மருந்து குப்பிகளை சீரான தட்ப வெப்ப நிலையில் பராமரிப்பது கடினம்.

அந்த சிரமத்தைப் போக்கும் வகையில் இந்த வாலெட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணத்தின்போது எளிதில் எடுத்துச் செல்லலாம். இந்த வாலெட் 18 சென்டிகிரேட் முதல் 26 சென்டிகிரேட் வரையான வெப்ப நிலையை பராமரிக்கும். இதில் தண்ணீரை நிரப்பி மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். இதன் விலை ரூ. 1,100 முதல் ரூ. 1,900 வரை. நான்கு வெவ்வேறு அளவுகளில் இது வெளிவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x