Published : 19 Nov 2017 08:48 AM
Last Updated : 19 Nov 2017 08:48 AM

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.56 கோடி

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 24 சதவீதம் உயர்ந்து ரூ.56 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ.45 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.109 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.96 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் 6 சதவீதம் உயர்ந்து ரூ. 281 கோடியாக இருக்கிறது.

ஜூலை செப்டம்பர் காலாண்டில் ரூ.765 கோடிக்கான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலத்தை விட 23 சதவீதம் அதிகமாகும். நிறுவனத்தின் நிகர வட்டி வரம்பு 4.8 சதவீதமாக இருக்கிறது. ஒட்டு மொத்தமாக கடன் வழங்கப்பட்ட அளவு 10 சதவீதம் உயர்ந்து ரூ.9,321 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் மொத்த வாராக்கடன் 3.4 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் 4 சதவீதமாக மொத்த வாராக்கடன் இருந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 0.13 சதவீதம் உயர்ந்து 621.35 ரூபாயாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x