Published : 15 Nov 2017 10:19 AM
Last Updated : 15 Nov 2017 10:19 AM

இவரைத் தெரியுமா?- தினேஷ் ஷாஹ்ரா

ருச்சி சோயா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 1986-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

ருச்சி குழும நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார். ருச்சி இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர், செயல் இயக்குநர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

ரசாயன பொறியியல் பட்டம் பெற்றவர். தொழில்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.

ஸ்கேன்பாயிண்ட் ஜியோமேட்டிக்ஸ் நிறுவனத்தின் தினசரி பொறுப்புகள் இல்லாத செயல் இயக்குநராக இருந்தவர்.

கிளிட்ச் டிரக்ஸ் இந்தியா நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர்.

இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் விவசாயக் குழு உறுப்பினர். இந்திய தரச் சான்று அமைப்பில் தாவர எண்ணெய் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x