Published : 17 Jul 2014 11:01 AM
Last Updated : 17 Jul 2014 11:01 AM

மகேஷ் கொடுமுடி - இவரைத் தெரியுமா?

$ ஜெர்மனியின் வோக்ஸ் வேகன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

$ 2008-ம் ஆண்டில் இந்நிறுவனத்தில் செயல் இயக்குநராக சேர்ந்த இவர் 6 ஆண்டுகளில் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

$ பொறியியல் பட்டமும், அமெரிக்காவில் நிர்வாகவியல் பட்டமும் பெற்ற இவர் ஆட்டோமொபைல் துறையில் மிகுந்த அனுபவம் மிக்கவர்.

$ புணே மற்றும் ஔரங்காபாதில் ஆலைகளைக் கொண்டுள்ள வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியச் சந்தையில் ஆடி, லம்போர்கினி, போர்ஷே, ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் கார்களை விற்பனை செய்கிறது

$ ஸ்கோடா கார்கள் இந்தியச் சந்தையில் 2001-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. ஆடி மற்றும் வோக்ஸ்வேகன் கார்கள் 2007-ல் அறிமுகப்படுத்தப்பட்டன.

$ வோக்ஸ்வேகன் தயாரிப்புகள் விற்பனையை அதிகரிப்பதற்கான உத்திகள், திட்டமிடல் வகுக்கும் பொறுப்பு இவரையே சாரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x