

மும்பை: இந்தியப் பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 66,000 புள்ளிகளையும் நிஃப்டி 19,500 புள்ளிகளையும் கடந்து புதிய உச்சம் தொட்டன.
அமெரிக்காவில் தீவிரமாக நிலவிவந்த பணவீக்கம் தற்போது சற்று குறைந்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, ஆசிய பங்குச் சந்தைகளில் நேற்றைய தினம் ஏற்றம் காணப்பட்டது. ஹாங்காங் பங்குச் சந்தை 2% உயர்ந்தது. டோக்கியோ, ஷாங்காய், சிட்னி, சியோல், சிங்கப்பூர் பங்குச் சந்தைகள் 1% உயர்ந்தன.
இந்தியப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரையில், வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 66,000 புள்ளிகளையும் நிஃப்டி 19,500 புள்ளிகளையும் கடந்து புதிய உச்சம் தொட்டன. வர்த்தக முடி
வில், சென்செக்ஸ் 165 புள்ளிகள் உயர்ந்து 65,558 ஆகவும் நிஃப்டி 29.45 புள்ளிகள் உயர்ந்து 19,413 ஆகவும் நிலைபெற்றன.