ஜூலை 12, 2023 | தங்கம் விலை ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்தை எட்டியது

ஜூலை 12, 2023 | தங்கம் விலை ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்தை எட்டியது
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 12) சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், மே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.5,500 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,672-க்கு விற்பனையாகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கத்தின் விலை 44 ஆயிரத்தை எட்டியிருக்கிறது.

இதேபோல், வெள்ளி விலை 0.10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,000 ஆக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in