

கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிறுவனங்கள் செய்துள்ள மோசடி அளவு ரூ. 10,800 கோடியாகும். நிறுவனங்கள் செய்யும் மோசடி குறித்து விசாரிக்கும் அலுவலகம் (எஸ்எப்ஐஓ) இதை கண்டுபிடித்துள்ளது.
2011-12ம் நிதி ஆண்டு முதல் நடப்பு ஆண்டு ஜூன் வரை மொத்தம் 78 நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. இதில் 31 நிறுவனங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் ரூ. 10,818 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
எஸ்ஐஎப்ஓ-வில் சந்தை ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவு (எம்ஆர்ஏயு) ஏற்படுத்தப்பட்டுள்ளது.இப்பிரிவு ஊடகங்களில் வெளியாகும் நிறுவன மோசடிகள் குறித்து விவரம் சேகரித்து அதனடிப்படையில் விசார ணையை மேற்கொள்ளுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.