

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயலை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து எண்ணெய் அகழ்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனம் எண்ணெய், எரிவாயு அகழ்வுப் பணிக்காக வைத்திருந்த எண்ணெய் வயல்களின் எண்ணிக்கை 21 ஆக இருந்தது. நிர்வாக சீரமைப்புக்காக சாத்தியமான எண்ணெய் வயல்களை மட்டுமே வைத்துக் கொண்டு மற்றவற்றை அரசிடம் திரும்ப ஒப்படைத்து வருகிறது. இதன்படி திரும்ப ஒப்படைத்தவகையில் இப்போது இந்நிறுவனத்திடம் 5 எண்ணெய், எரிவாயு வயல்களே துரப்பணப் பணி மேற்கொள்வதற்காக எஞ்சியுள்ளது.
கேஜி எண்ணெய் வயல் கேஜி-டி6, வங்காள விரிகுடா, பன்னா முக்தா மற்றும் தபதி ஆகிய எண்ணெய் வயல்களில் ரிலையன்ஸ் துரப்பணப் பணியை மேற்கொண்டுள்ளது.