

சென்னை: இந்தியாவில் தரமான கார்கள் உற்பத்தியில் முன்னிலை வகித்துவரும் கியா இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கியா நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பு செல்டோஸ் காராகும். உலக அளவில் கியா நிறுவனத்தின் 10 கார்கள் விற்பனையானால் அதில் ஒன்று செல்டோஸாக இருக்கும். இந்தியாவில் கியா கார்கள் விற்பனையில் செல்டோஸ் பங்கு 55 சதவீதம்.
புதிய செல்டோஸில் 2-ம் நிலையைச் சேர்ந்த 17 அடாஸ் வசதிகள் (3 ரேடார், 1 கேமராவுடன்) உள்ளன. இந்த வகை கார்களில் 15 விதமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் நிலையில் இதில் 32 பாதுகாப்பு வசதிகள் உள்ளன. மேலும் ஸ்மார்ட்ஸ்டிரீம் G1.5 T-GDi பெட்ரோல் இன்ஜின் இதில் உள்ளது. இதன் மூலம் 160பிஎஸ் திறன், 253என்எம் டார்க் கிடைப்பதால், கியா செல்டோஸ் மிகவும் சக்தி வாய்ந்த எஸ்யுவி காராக உள்ளது.
இவை மட்டுமின்றி இதில் 26.4 செமீ அளவு கொண்ட முழு டிஜிட்டல் கிளஸ்டர், 26.03 செமீ அளவு கொண்ட ஹெச்.டி. தொடுதிரை என டூயல் ஸ்கிரீன் பனோரமிக் டிஸ்பிளே உள்ளது. முற்றிலும் தானாக இயங்கும் ஏர்கண்டிஷனர், R18 46.20 செமீ கிரிஸ்டல் கட் அலாய் வீல்கள், பெரிய சன்ரூப், எலக்ட்ரிக் பார்கிங் பிரேக், 6 காற்றுப் பைகள், 3 பாயின்ட் சீட் பெல்ட், ஏபிஎஸ், எல்லா வீல்களிலும் டிஸ்க் பிரேக் போன்ற வசதிகள் உள்ளன. வழக்கமான வண்ணங்களுடன் கூடுதலாக பியூவ்டர் ஆலிவ் வண்ணத்திலும் புதிய செல்டோஸ் கிடைக்கிறது.
புதிய செல்டோஸ் அறிமுக விழாவில் கியா இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டே-ஜின் பார்க் கூறுகையில், ``செல்டோஸுடன் நாங்கள் இந்தியாவில் காலடி பதித்தோம். தற்போது அதை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்மூலம் இந்தியாவில் 10 சதவீத சந்தை பங்கை பிடிக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்'' என்றார்.