வர்த்தக பயன்பட்டு சிலிண்டர் விலை உயர்வு

வர்த்தக பயன்பட்டு சிலிண்டர் விலை உயர்வு
Updated on
1 min read

சென்னை: சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியதையடுத்து, கடந்த நான்கைந்து மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளன.

இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.8 அதிகரித்துள்ளது. இதனால், அதன் விலை ரூ.1,937ல் இருந்து ரூ.1,945 ஆக அதிகரித்தது. அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் இன்றி ரூ.1,118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in