Published : 08 Jul 2014 12:08 PM
Last Updated : 08 Jul 2014 12:08 PM
நுகர்வோர் மின் பொருள்கள் மீதான மதிப்பு கூட்டு வரி (வாட்) மற்றும் உற்பத்தி வரியைக் குறைக்க வேண்டும் என்று மிர்க் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன இயக்கு குலு மிர்சந்தானி கோரிக்கை விடுத்துள்ளார். இப்போது நுகர்வோர் மின்பொருள்கள் மீதான மதிப்பு கூட்டு வரி 12.5 சதவீதமாகவும், உற்பத்தி வரி 12 சதவீதமாகவும் உள்ளது. இவற்றில் தலா 2 சதவீதம் குறைத்தால் நுகர்வோருக்கு பலன் கிடைக்கும். அண்டை நாடுகளுடனான தயாரிப்புகளுடன் உள்ளூர் தயாரிப்பாளர்களும் போட்டியிட வேண்டுமானால் வரி குறைப்பு அவசியம்.