

நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதமாகக் குறைப்பது சாத்தியமே என்று கோடக் மஹிந்திரா வங்கியின் இயக்குநர் உதய் கோடக் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் அறிவிப்பில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டிருந்தார். இந்த இலக்கு சாத்தியமானதுதான்.
அமைச்சர் அறிவித்தபடி வருவாயைப் பெருக்க முயற்சி எடுக்க வேண்டும். அவ்வா றில்லாமல் செலவுகளைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது என்று கோடக் கூறினார்.
நிதிப் பற்றாக்குறை அடுத்த நிதி ஆண்டில் 3.6 சதவீதமாகவும், 2017-ம் நிதிஆண்டில் 3 சதவீதமாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜேட்லி அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நிலைமையில் பல ஏற்றம், இறக்கம் காணப் படுகின்றன. இருப்பினும் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்று கோடக் குறிப்பிட்டார்.
இதனிடையே தரச்சான்று நிறுவனங்ளான எஸ் அண்ட் பி, பிட்ச், மூடி’ஸ் ஆகியன மானியக் குறைப்பு குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளன.