புதிய  உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 64,000, நிஃப்டி 19,000 புள்ளிகள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: பங்குச் சந்தை நேற்று புதிய உச்சத்தைத் தொட்டது. சென்செக்ஸ் 64,000 புள்ளிகளையும், நிஃப்டி முதன் முறையாக 19,000 புள்ளிகளையும் தொட்டு புதிய சாதனை படைத்தன.

செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பு நேற்றும் தொடர்ந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு ஏற்பட்டு அவற்றின் விலை அதிகரித்ததே நேற்றைய வர்த்தகத்தின் விறுவிறுப்புக்கு காரணமாக அமைந்தது.

வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 621 புள்ளிகள் உயர்ந்து 64,037.10 புள்ளிகளையும், நிஃப்டி 193.85 புள்ளிகள் உயர்ந்து 19,011.25 புள்ளிகளையும் எட்டியது. இது முன் எப்போதும் இல்லாத புதிய உச்சம் ஆகும். வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 499 புள்ளிகள் உயர்ந்து 63,915-லும், நிஃப்டி 154 புள்ளிகள் அதிகரித்து 18,972-லும் நிலைபெற்றன.

என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், டைட்டன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இண்ட் வங்கி, இன்போசிஸ், எச்டிஎஃப்சி பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in