

சென்னை: மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் 11 நாடுகளில் 320-க்கும் அதிகமான ஷோரூம்களைக் கொண்ட உலகளவில் 6-வது பெரிய நகை விற்பனை நிறுவனமாகத் திகழ்கிறது.
இந்நிறுவனம் ‘ஜூனியர் என்டிஆர்’ என்று அழைக்கப்படும் பிரபல சூப்பர் ஸ்டாரான நந்தமூரி தாரக ராமாராவ் ஜூனியரை தனது புதிய விளம்பரத் தூதராக நியமித்துள்ளது. இனி வரவுள்ள விளம்பரங்களில் ஜூனியர் என்டிஆர் பங்கேற்பார். இவர் மலபார் கோல்டு & டைமண்ட்ஸின் முக்கிய மதிப்புகளைப் பிரதிபலிப்பார். அதாவது நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிபுணத்துவம் போன்றவற்றை தனது அன்பான ஆளுமையால் வெளிப்படுத்துவார். இவர் நாடு முழுவதும் நுகர்வோர் இணைப்பை வலுப்படுத்துவார்.
மலபாருடன் இணைந்தது குறித்து ஜூனியர் என்டிஆர் கூறும் போது, “நம்பிக்கையான நகை நிறுவனங்களுள் ஒன்றான மலபார் கோல்டு & டைமண்ட்ஸுடன் மீண்டும் இணைந்துள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது மதிப்புகளுக்கும் நிறுவனத்தின் மதிப்புகளுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பைக் காண்கிறேன்” என்றார்.
மலபார் குழுமத் தலைவர் எம்.பி.அகமத் கூறும்போது, “ஜூனியர் என்டிஆர், நாட்டின் பல பகுதிகளில் பரவலாக விரும்பப்படும் திரை நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். சிறந்த நடிகரான அவரது ஈர்க்கக்கூடிய ஆளுமை எங்கள் நிறுவனத்தின் முன்மொழிவை மேலும் உயர்த்தும்” என்றார். மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.