

வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது. கடந்த ஜூன் 17-ம் தேதி குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு 300 டாலர் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த உயர்வினாலும் உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 500 டாலராக மத்திய அரசு அதிகரித்திருக்கிறது இதன் மூலம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு கீழே இருக்கும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது.
பருவ மழை தாமதமாகி வருவதால் மொத்த மற்றும் சில்லறை விலைகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனால் ஏற்றுமதி விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மொத்த விலை அடிப்படையில் 40 சதவீதம் அளவுக்கு வெங்காயத்தின் விலை அதிகரித்திருக்கிறது.