Published : 01 Oct 2017 10:26 AM
Last Updated : 01 Oct 2017 10:26 AM

டிசம்பர் காலாண்டு சிறு சேமிப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை

டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் மத்திய அரசு செய்யவில்லை. பிபிஎப், கிஸான் விகாஸ் பத்திரம், சுகன்யா சம்ரிதி திட்டம் ஆகிய திட்டங்களுக்கு வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. செப்டம்பர் காலாண்டில் இருந்த வட்டி விகிதமே டிசம்பர் மாதத்திலும் தொடரும் என நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. பிபிஎப் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.8 சதவீதமாக இருக்கிறது. அதேபோல கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கிறது.

பெண் குழுந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.3 சதவீதமாகும். அதேபோல மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதமும் 8.3 சதவீதம் என்னும் அளவிலே இருக்கிறது. இவர்களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x