Published : 17 Oct 2017 10:28 AM
Last Updated : 17 Oct 2017 10:28 AM

இவரைத் தெரியுமா?- ஃபேப்ரிஸ் பிரிகெய்ர்

போக்குவரத்து விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர். 2012-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2006-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

1983-ம் ஆண்டு கிரெயிஸ் மால்வெலியி நிறுவனத்தில் பொறியாளராக தனது பணியைத் தொடங்கியவர்.

பிரெஞ்ச் அரசின் வர்த்தகத் துறைக்கு ஆலோசகர் பொறுப்பில் இருந்தவர். ஏர்பஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2003-ம் ஆண்டிலிருந்து 2005-ம் ஆண்டு வரை யூரோகாப்டர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, மாத்ரா பிஏஇ டைனமிக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

பிரெஞ்ச் அரசு வழங்கும் மிக உயரிய விருதான செவாலியே விருதை வென்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x