நீலப் பொருளாதாரத்தை தணிக்கை செய்ய புதிய நுட்பங்களை உருவாக்க வேண்டும்: சிஏஜி கிரிஷ் சந்திர முர்மு வலியுறுத்தல்

நீலப் பொருளாதாரத்தை தணிக்கை செய்ய புதிய நுட்பங்களை உருவாக்க வேண்டும்: சிஏஜி கிரிஷ் சந்திர முர்மு வலியுறுத்தல்
Updated on
1 min read

பஞ்சிம்: கடல்வாழ் உயிரினங்கள் அல்லது நீலப் பொருளாதாரத்தை தணிக்கை செய்வதற்கான புதியநுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) கிரிஷ் சந்திர முர்மு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடல் வளங்களை பாதுகாத்து நிலையான வளர்ச்சிக்காக பயன்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. முன்னேற்றம், செயலாக்கத்தை கண்காணித்தல், முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை அடையாளம் காணும் பணிகளில் மேற்கொள்ளப்படும் தணிக்கையின் மூலமாக தேசிய முன்னுரிமைக்கான முயற்சிகளில் உச்ச தணிக்கைநிறுவனங்கள் தங்களை தாங்களே இணைத்துக் கொள்ள வேண்டும்.

நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக கடல்வாழ் உயிரினங்கள் அல்லது நீலப் பொருளாதாரத்தை தணிக்கை செய்வதற்கான புதிய நுட்பங்களையும், திறன்களையும் உச்சதணிக்கை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு: இன்றைய நிலையில் பல்வேறு நிர்வாக அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு வெகுவாக அதிகரித்து வருகிறது. இது தவிர்க்க முடியாதது. எனவே, தணிக்கை அமைப்புகள் அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கிரிஷ் சந்திர முர்மு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in