Last Updated : 02 Oct, 2017 06:50 AM

 

Published : 02 Oct 2017 06:50 AM
Last Updated : 02 Oct 2017 06:50 AM

புதிய வகை எஸ் - கிராஸ் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனம் புதிய வகையான எஸ்-கிராஸ் மாடல் காரை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே உள்ள எஸ்-கிராஸ் மாடல் காரின் மேம்படுத்தப்பட்ட வகையாக இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வகை எஸ்-கிராஸ் காரில் நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார்களின் டெல்லி விற்பனையக விலை ரூ.8.49 லட்சத்திலிருந்து ரூ.11.29 லட்சம் வரை உள்ளது.

``எஸ்-கிராஸ் புதிய தோற்றத்துடன் வந்துள்ளது. எங்களது பயணத்தை மாற்றியமைக்கும் வகையில் இந்த கார் இருக்கும். நகர்ப்புரங்களில் விற்பனையாகும் பிரீமியம் ரக கார்களில் எஸ்-கிராஸ் வாகனம் தனி இடத்தை பிடிக்கும் என்று நம்புகிறோம்’’ என்று மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கெனிச்சி அயுக்காவா தெரிவித்துள்ளார். காரிலிருந்து வெளிவரும் மாசுபாட்டை குறைப்பதற்காக புதிய தொழில்நுட்பம் இந்தக் காரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x