

$ நியூயார்க்கில் உள்ள ஸ்டெர்ன் நிர்வாகக் கல்லூரியின் பேராசிரியர். கார்பரேட் ஃபைனான்ஸ் மற்றும் வேல்யூஷன் ஆகியவற்றை கற்றுக்கொடுப்பவர். கடந்த 27 வருடங்களாக இங்கு பணிபுரிகிறார்.
$ லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்.
$ ஐ.ஐ.எம். பெங்களூருவில் நிர்வாகப்பட்டமும் முடித்தவர்.
$ The Dark Side of Valuation, The Little Book of Valuation, Investment Valuation உள்ளிட்ட சில நிர்வாக புத்தங்களை எழுதி இருக்கிறார்.
$ பிஸினஸ் வீக் பத்திரிகை, அமெரிக்காவின் சிறந்த 12 நிர்வாக பேராசிரியர்களில் இவரையும் ஒருவராக பட்டியலிட்டது.
$ பங்குச்சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் யாரையும் எந்த முதலீட்டுத் திட்டத்தையும் பின்பற்றத்தேவை இல்லை. உங்களுக்கு வசதியான ஒரு திட்டத்தை, கொள்கையை உருவாக்குங்கள் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்