

புதுடெல்லி: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தால், பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு தற்போது ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. எனினும் பல ரயில்களில் இன்னும் டிக்கெட் உறுதியாகாமல் காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு, கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் திறப்பது காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் விமானங்களில் செல்ல திட்டமிடுகின்றனர். இதனால் விமானக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, ஹைதராபாத், டெல்லி மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து பிற நகரங்களுக்கான விமான கட்டணம் கடந்த 5 நாட்களில் மட்டும் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது என்று விமானப் போக்குவரத்து வட்டாரங்கள் கூறியுள்ளன.