கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவை பழமுதிர் நிலையத்தை வாங்கியது வெஸ்ட் பிரிட்ஜ் கேபிடல்

Published on

சென்னை: கேபிஎன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் கோவை பழமுதிர் நிலையம் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்கும் நிறுவனம் ஆகும். சின்னசாமி மற்றும் நடராஜன் ஆகிய இரு சகோதரர்களால் 1960-களில் ரூ.300 முதலீட்டில் சிறு கடையாக ஆரம்பித்து பின்னர் விரிவாக்கப்பட்டது.

கடந்த 2012-ல் கேபிஎன் பார்ம் பிரஷ் என்ற பெயரில் அது நிறுவனமாக்கப்பட்டது. இதன் ஆண்டு வருவாய் ரூ.400 கோடி. இந்நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை ரூ.600 கோடி மதிப்பில் முதலீட்டு நிறுவனமான வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிர்வாக இயக்குநர் செந்தில் நடராஜனே தொடர்ந்து நிறுவனத்தை நிர்வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in