

தொழில்துறைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக சைபர் குற்றங்கள் விளங்குவதாக தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் நிறுவனங் களின் தலைமை நிர்வாகிகளிடம் கேபிஎம்ஜி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இத்தகவல் வெளியாகியுள்ளது. 89 சதவீத நிர்வாகிகள் இக்கருத்தையே தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக சைபர் குற்றங்களின் வரம்பு நாடு களைக் கடந்து பரவியுள்ளது. மேலும் குற்றவாளிகள் மிக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதோடு சைபர் பாதுகாப்புகளையும் நன்கு உணர்ந்துள்ளனர். இதனால் இவர்கள் அதிநவீன தொழில் நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
முன்பெல்லாம் நிதி திருட்டு களை நடத்தி வந்த இத்தகைய குற்றவாளிகள் இப்போது நிதி சார்ந்த தகவல்களை திருடுவதிலும், வர்த்தக ரகசியங் களைத் திருடுவதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக அரசின் தகவல்களை திருடுவதில் இவர்கள் அதிகக் கவனம் செலுத்துகின்றனர் என்று கேபிஎம்ஜி வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சைபர் குற்றங்கள் அதிகரிப்பதால் நிதி இழப்பு ஏற்படுவதோடு மட்டுமின்றி நிறுவ னங்களின் பிராண்டுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சந்தையில் குறிப்பிட்ட நிறுவன பிராண்டுகளின் மதிப்பு குறைந்து போகிறது. சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுக்க வேண்டியது அவசிய மாகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சைபர் கிரைம் 2014 என்ற புள்ளிவிவர கணக்கில் மொத்தம் 170 நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் 58 சதவீதம் பேர் நிதித்துறை அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். 11 சதவீதம் பேர் தொலைத் தொடர்புத் துறையினர் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர்.