நிதிப் பற்றாக்குறையை குறைக்க முடியும்

நிதிப் பற்றாக்குறையை குறைக்க முடியும்
Updated on
1 min read

நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதமாக குறைப்பது சாத்தியமே என்று நிதித் துறை செயலாளர் அர்விந்த மாயாராம் தெரிவித்தார். நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீதமாக குறைக்க முடியும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். ஆனால் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இது சாத்தியமா என்று விமர்சனம் செய்திருந்தார்கள்.

இந்த நிலையில் இது சாத்தியம் என்று பிக்கி நடத்திய நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.

செலவுகளைக் குறைக்காமல் முதலீடுகளை அதிகரிப்பதுதான் நோக்கம். முதலீடுகளை அதிகரிப்பதற்காக சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இதன்மூலம் நிதிப் பற்றாக்குறையை குறைக்க முடியும் என்றார் அவர். மேலும் நடப்பு நிதி ஆண்டில் 5.8 முதல் 5.9 சதவீத வளர்ச்சியையும் இந்தியாவால் அடைய முடியும் என்றார்.

மேலும், பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பதால் பங்கு விலக்கலுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிட்ச், மூடி மற்றும் எஸ் அண்ட் பி ஆகிய நிறுவனங்கள் நிதிப் பற்றாக்குறை 4.1 சதவீதமாகக் குறைப்பது சாத்தியம் இல்லாதது என்றும், பருவ மழை குறைவு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது போன்றவை சவால் என்றும் இந்த நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in