

வருமான வரிச் சட்டம் 80 சி- பிரிவின் கீழ் தனிநபர்கள் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு அளிக்கப்படும் வரி விலக்கு உச்ச வரம்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே சேமிப்பை அதிகரிக்கும் வகையிலும், தனிநபர்களின் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்பு வருமான வரிச் சட்டப் பிரிவு 80சி, 80சிசி, 80சிசிசி ஆகிய பிரிவுகளின் கீழ் ரூ.1 லட்சம் வரை முதலீடுகளுக்கு வரி விலக்குப் பெற முடியும் என்ற நிலை இருந்தது.
இப்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை வரிவிலக்குப் பெற முடியும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி), சேமிப்பு 38 சதவீதமாக இருந்தது. 2012-13-ல் இது 30 சதவீதமாக குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.