

நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் நிகர லாபம் 18% உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 1,409 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது 1,667 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இருந்தாலும் இதர வருமானம் மற்றும் சிறிதளவு சரிந்தி ருக்கிறது. வாராக்கடனும் சிறிதளவு உயர்ந்திருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 46 சதவீதம் குறைந்ததால் நிகர லாபம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 712 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த காலாண்டில் 387 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. நிகர வட்டி வருமானம் 16 சதவீதம் அதிகரித்து 3,310 கோடி ரூபாயாக இருக்கிறது. மொத்த வாராக்கடன் 1.34 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.44 சதவீதமாகவும் இருக்கிறது.