

மோசடித் திட்டங்கள் மூலம் முதலீட்டாளர்களைக் கவரும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களை (என்பிஎப்சி) ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் 34,700 என்பிஎப்சி-க்களின் பட்டியை அளித்துள்ளது. இவை அனைத்தும் முதலீட்டாளர் களிடமிருந்து நிதி திரட்டுவதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரூ. 10 ஆயிரம் கோடியை ஏமாற்றிய சாரதா சீட்டு நிறுவன மோசடியைத் தொடர்ந்து, நிதி நிறுவனங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உள்ள நிறுவனங்களில் அனுமதி பெறாமல் பொதுமக்களிடம் நிதி திரட்டும் நிறுவனங்களின் பட்டியலை ஆர்பிஐ தயாரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 4,102 நிறுவனங்கள்தான் பதிவு செய்துள்ளன. 13,647 நிறுவனங்கள் நிதி நிறுவனங்களாக செயல் படுவதற்கான குறைந்தபட்ச தகுதியைக் கூட பெறாதவை. 6,182 நிறுவனங்கள் பற்றிய முழு விவரம் கிடைக்கவில்லை. 4,125 நிறுவனங்கள் திவாலாகிவிட்டதாக அமைச்சக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.