Published : 28 Oct 2017 10:02 AM
Last Updated : 28 Oct 2017 10:02 AM

34 பொதுத்துறை நிறுவனங்களை விற்க நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை

நஷ்டத்தில் இயங்கும் 34 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. கிரைஸில் இந்தியா ஏற்பாடு செய்திருந்த உள்கட்டமைப்பு சார்ந்த மாநாட்டில் பேசுகையில் நிதி ஆயோக்கின் சிஇஓ அமிதாப் காந்த் இதனைக் கூறினார்.

அவர் மேலும் பேசியதாவது: நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ச்சியாக இயக்குவது குறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து கருத்து கேட்கப்பட்டது. இதனையடுத்து நிதி ஆயோக் பரிந்துரைகளை அளித்துள்ளது. குறிப்பாக நஷ்டத்தில் இயங்கும் 34 பொதுத்துறை நிறுவனங்களை உத்திசார்ந்து விற்பனை செய்ய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது என்றார். நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குவிலக்கல் மூலம் மத்திய அரசு ரூ.72,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x