வெளிமாநில வியாபாரிகள் வருகையால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பு

வெளிமாநில வியாபாரிகள் வருகையால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பு
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு ஜவுளிச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகையால், விற்பனை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே ஈரோடு கனி ஜவுளிச்சந்தை செயல்படுகிறது. இங்கு தினசரி சந்தை மற்றும் திங்கள் மாலை முதல் செவ்வாய் மாலை வரை மொத்த விற்பனை ஜவுளிச் சந்தையும் நடைபெறுகிறது. இதேபோல, சென்ட்ரல் திரையரங்கு அருகிலும், அசோகபுரத்திலும் ஜவுளிச் சந்தை நடக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரும் ஜவுளி வியாபாரிகள், இங்கு கொள்முதல் செய்கின்றனர். ஜவுளிச் சந்தைக்கு நேற்று ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்ததால் விற்பனை அதிகரித்தது.

மேலும், தற்போது பள்ளிகள் திறப்பு காலம் என்பதால், பள்ளி சீருடைகள் விற்பனை, கோடைகாலம் என்பதால் கைத்தறித் துணிகள் விற்பனை அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். தினசரி சந்தையில், கைத்தறி வேட்டி, துண்டு, சேலை ரகங்கள், பள்ளிக்கு எடுத்துச் செல்லும் சிறிய துண்டுகள் உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in