Published : 08 Oct 2017 11:03 AM
Last Updated : 08 Oct 2017 11:03 AM

வோல்வோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சார்லஸ்

வோல்வோ ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சார்லஸ் பிரம்ப் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையில் இப்பொறுப்பில் இருந்த டாம் வான் பான்ஸ்டோர்ப் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய நிர்வாக இயக்குநராக சார்லஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆட்டோமொபைல் துறையில் 17 ஆண்டுக்கால அனுபவம் மிக்க இவர், வோல்வோ குழுமத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். ஸ்வீடனில் உள்ள வோல்வோ நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவில் மூத்த இயக்குநராக பணியாற்றிய அனுபவம் உடையவர். ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் சந்தைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

இந்தியாவில் கார்களை தயாரிக்கும் திட்டத்தின்கீழ் விரைவில் புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டப் போவதாக சார்லஸ் பிரம்ப் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x