

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரித்திருப்பது வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏ கூறி இருக்கிறது. அந்நிய முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் புதிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும் .அதே சமயத்தில் தற்போது இருக்கும் நிறுவனங்களும் வலிமையாகும் என்றும் ஐஆர்டிஏ உறுப்பினர் (நிதி மற்றும் முதலீடு) ராதாகிருஷ்ணன் நாயர் தெரிவித்தார்.
பெரிய அளவில் முதலீடு வரும் போது இந்த துறை அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று சிஐஐ நடத்திய காப்பீட்டு கருத்தரங்கில் தெரிவித்தார். மேலும் அந்நிய முதலீட்டை அதிகரிக்கும்போது தற்போது இருக்கும் நிறுவனங்கள் விரிவாக்க பணிகளில் ஈடுபடுவது அதிகரிக்கும், மேலும் டெக்னாலஜியையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
விவசாயத்துக்குத் தேவையான காப்பீட்டை அதிகமாக விரிவாக்க முடியும், அதே சமயம் மருத்துவக் காப்பீட்டை அதிக மக்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.