Published : 02 Jun 2023 08:57 AM
Last Updated : 02 Jun 2023 08:57 AM
புதுடெல்லி: கரோனா பரவலின்போது மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. இதனால் தெரு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்தனர். இதையடுத்து அவர்களின் தொழிலை முன்னேற்ற அவர்களுக்கு சிறு கடன்கள் வழங்கும் நோக்கில் மத்திய அரசு தெரு வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பார் நிதி (பிஎம் - எஸ்விஏ நிதி) திட்டத்தை 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வந்தது.
இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு நேற்றோடு மூன்று ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் தெரு வியாபாரிகளுக்கு 46 லட்சம் முறை கடன் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் தடவை தெரு வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் வரை கடன் பெற முடியும். கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினால், இரண்டாம் தடவை ரூ.20 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும். அதை திருப்பிச் செலுத்திய பிறகு, மூன்றாம் தடவை ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT