Published : 02 Jun 2023 06:00 AM
Last Updated : 02 Jun 2023 06:00 AM
சென்னை: தமிழ்நாடு, கேரளாவில் முன்னணி தங்க நகை வணிக நிறுவனமான போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் புதிய விளம்பர தூதராக நடிகை ஜோதிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
போத்தீஸ் ஸ்வர்ண மஹால் சார்பில் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள `ஸ்வர்ண லக்ஷண கலெக்ஷன்' தங்க நகைகளுக்கு பிரத்யேகமான விளம்பரத் தூதராக இவர் செயல்படுவார்.
போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ரிவர்சிபிள் தங்க நகை ஒரு வியப்பூட்டும் 2 விதமான கலைநய படைப்பாகும். இதில் ஒரு பக்கம் உயரிய இத்தாலிய கலைநய வடிவமைப்பும், மறுபக்கம் ஆன்ட்டிக் கலைநய வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து நடிகை ஜோதிகா கூறும்போது, ``சிறந்த தரம், தனித்துவமான டிசைன்கள், அளவில்லாத கலெக்ஷன்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இணையில்லாத சேவை அளிப்பதில் புகழ் பெற்ற போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நிறுவனத்தின் முகமாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.
போத்தீஸ் குழும நிர்வாக இயக்குநர் போத்தீஸ் ரமேஷ்கூறும்போது, ``எங்களின் மதிப்புக்குரிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு நகை விலையில், முற்றிலும் 2 வகையான வடிவமைப்புகளை உள்ளடக்கிய நகைகளை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நேரத்தில் எமது தனித்துவமான ரிவர்சபிள் நகைகள் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சேமிப்பைத் தரும்'' என்றார்.
ஸ்வர்ண லக்ஷணா கலெக்ஷனில் ஹாரம், மணப்பெண் செட்டுகள் தவிர8 கிராம் கம்மல், 16 கிராம் பிரேஸ்லெட், 24 கிராம் நெக்லெஸ் போன்ற நகைகள் கிடைக்கின்றன. இவை சென்னை குரோம்பேட்டை, திருநெல்வேலி, திருவனந்தபுரம் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT