செயற்கைக்கோள் மூலம் 100% நெட்வொர்க் - புதிய திட்டத்துடன் களம் இறங்கும் ஜியோ நிறுவனம்

செயற்கைக்கோள் மூலம் 100% நெட்வொர்க் - புதிய திட்டத்துடன் களம் இறங்கும் ஜியோ நிறுவனம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்தியா முழு​வதும் 100% நெட்​வொர்க் கவரேஜ் வழங்கும் நோக்​கில் 1,600 செயற்கைக்கோள்கள் மற்​றும் 23 தரை நிலை​யங்​களு​டன் புதிய தொழில்​நுட்​பக் கட்​டமைப்பை உருவாக்க ஜியோ நிறுவனம் முடிவு செய்​துள்​ளது.

இந்​தி​யா​வின் மிகப்​பெரிய தொலைத்​தொடர்பு நிறு​வன​மாக விளங்​கும் ரிலை​யன்ஸ் ஜியோ, மொபைல் டவர்​கள் மற்​றும் ஃபைபர் கேபிள்​களை மட்​டுமே நம்​பி​யிருக்​காமல், செயற்​கைக்​கோள்​கள் மூலம் தனது நெட்​வொர்க் சேவையை விரிவுபடுத்​தத் திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​காக, சுமார் 1,600 செயற்​கைக்​கோள்​கள் மற்​றும் இந்​தியா முழு​வதும் 23 தரை நிலை​யங்​களைக் கொண்ட புதிய தொழில்​நுட்​பக் கட்​டமைப்பை உரு​வாக்க அந்​நிறு​வனம் முடிவு செய்​துள்​ளது.

6 லட்​சம் கிராமங்​கள்

டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 10-வது தொலை​தொடர்பு மாநாட்​டில் ஜியோ நிறு​வனம் தனது செயற்​கைக்​கோள் இணைப்பு திட்​டங்​களை காட்​சிப்​படுத்​தி​யது. வழக்​க​மான தொலைத்​தொடர்பு உள்​கட்​டமைப்பை உரு​வாக்​கு​வது கடின​மாக உள்ள இந்​தி​யா​வின் பகு​தி​களை சென்​றடைவதற்​காக, தற்​போதுள்ள தரைவழி வலை​யமைப்​புடன் செயற்​கைக்​கோள்​களை​யும் பயன்​படுத்​தும் நோக்​குடன், இந்த திட்​டத்தை அந்​நிறு​வனம் `இறை​யாண்மை செயற்​கைக்​கோள் இணைப்​பு' என்று முன்வைக்கிறது.

இந்த கலப்பு செயற்​கைக்​கோள்​-தரை அமைப்​பின் மூலம் 6 லட்சத்துக்​கும் அதி​க​மான கிராமங்​கள், நிலப்​பரப்​பு​கள் மற்​றும் கடல் பகு​தி​கள் அனைத்​தும் 100 சதவீத கவரேஜ் பெறும் என்று ஜியோ நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. குறிப்​பாக தொலை​தூர பகுதிகள், தீவு​கள் மற்​றும் எல்​லைப் பகு​தி​களில் இந்​தச் சேவை மிக​வும் பயனுள்​ள​தாக இருக்​கும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

`மேக் இன் இந்​தி​யா'

தனித்​தனி அமைப்​பாக அல்​லாமல், தனது தற்​போதைய மொபைல் மற்​றும் ஃபைபர் உள்​கட்​டமைப்​புடன் இந்த செயற்​கைக்​கோள் வலை​யமைப்பை ஒருங்​கிணைக்க ஜியோ திட்டமிட்டுள்​ளது. வணிக நிறு​வனங்​கள், கிராமப்​புறங்​கள், விமானப் போக்​கு​வரத்​து, கடல்​சார் துறை, அரசு, பாது​காப்​புத்​துறை மற்​றும் பேரிடர் நிவாரணப் பணி​கள் ஆகிய​வற்​றில் இந்த வலை​யமைப்பு பயன்​படுத்​தப்​படும் என அந்​நிறு​வனம் அறிவித்துள்​ளது.

இந்​தத் திட்​டம், மத்​திய அரசின் லட்​சி​ய​மான 'மேக் இன் இந்​தி​யா' முயற்​சிக்கு மற்​றொரு முக்​கிய மைல்​கல்​லாக​வும், தொழில்​நுட்ப தன்​னிறைவு நோக்​கில் ஒரு பெரிய முன்​னேற்​ற​மாகவும் கருதப்படு​கிறது. ஜியோ நிறு​வனம் பல்​வேறு கட்​டங்​களாக இத்​திட்​டத்தை செயல்​படுத்த முடிவு செய்​துள்​ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு செப்​டம்​பரில் ஒரு சோதனை முயற்​சியை நடத்​த​வும், 2030-க்​குள் 400 முதல் 450 செயற்​கைக்​கோள்​களை நிலைநிறுத்​த​வும் திட்​ட​மிட்​டுள்​ளது. 2035-க்​குள் முழு 1,600 செயற்​கைக்​கோள் தொகுப்​பை​யும் நிறைவு செய்ய இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது.

எலான் மஸ்க் குற்​றச்​சாட்டு

இந்​தி​யா​வில் வணி​கரீ​தி​யான செயற்​கைக்​கோள் இணைய சேவை​களை தொடங்​கு​வதற்கு தேவை​யான மீத​முள்ள ஒப்புதல்களுக்​காக எலான் மஸ்க்​கின் ஸ்டார்​லிங்க் நிறு​வனம் இன்​னும் காத்​திருக்​கும் வேளை​யில் ஜியோ​வின் இந்த திட்​டம் வந்துள்​ளது. இந்​தி​யா​வில் ஸ்டார்​லிங்க் திட்​டத்தை வரவி​டா​மல் சில செல்​வந்​தர்​கள் தடுப்​ப​தாக எலான் மஸ்க் நேற்று குற்​றம்​ சாட்டி இருந்தார்.

செயற்கைக்கோள் மூலம் 100% நெட்வொர்க் - புதிய திட்டத்துடன் களம் இறங்கும் ஜியோ நிறுவனம்
‘அமெரிக்காவில் பணிபுரிவோர் இந்தியாவுக்கு திரும்பி வாருங்கள்’ - சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in