

சென்னை: ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம் என்ற மக்களை ஏமாற்றிய திமுக இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
"நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல.
நீட் விவகாரத்தில் பழனிசாமி அரசு நடத்திய நாடகத்திற்கு கொஞ்சமும் சளைக்காத வகையில், ‘ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம்’ என்று மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா?"
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.