அணிவகுப்பு வாகனம் புறக்கணிப்பு: சிதம்பரத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் உருவ முகமூடி அணிந்து போராட்டம்

அணிவகுப்பு வாகனம் புறக்கணிப்பு: சிதம்பரத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் உருவ முகமூடி அணிந்து போராட்டம்
Updated on
1 min read

கடலூர்: தமிழகத்தின் அணிவகுப்பு வாகனம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சுதந்தர போராட்ட வீரர்கள் உருவம் பொறித்த முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா ஊர்வலத்தில் தமிழக சுதந்திர போராட்ட தலைவர்கள் வேலுநாச்சியார், பாரதியார், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள் ஆகியோர் உருவம் பொறித்த ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து இன்று(ஜன.26) சிதம்பரம் மேல வீதி கஞ்சித்தொட்டி முனையிலிருந்து அண்ணா சிலை வரை சுதந்திர போராட்ட தலைவர்கள் முக உருவம் பொறித்த முகமூடியை அணிந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் குமரவேல், சிதம்பரம் நகர ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் கோபால், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கவியரசன், மாவட்ட குழு உறுப்பினர் பிரதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கஞ்சித் தொட்டி முனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நிர்வாகிகள் மூசா , முத்து சங்கமேஸ்வரன உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in