

நாட்டின் 73வது குடியரசுத் தினத்தையொட்டி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
73 வது குடியரசுத் தினம் நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசுத் தினவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
இதனிடையே, அண்டை மாநிலம் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் தமிழிசை ஏற்றுக் கொண்டார்.
மேலும் ஹைதராபாத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.