

சென்னை: "நம் தாய்த் தமிழை உயர்த்தி பிடிக்க தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம்" என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உயிருக்கு நிகரான நம் தாய்த் தமிழை உயர்த்தி பிடிக்க தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில், தமிழை இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கவும், திருக்குறளை தேசிய நூலாக்கவும் உழைத்திட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளில் உறுதியேற்றிடுவோம்" என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.