Published : 17 Jan 2022 01:53 PM
Last Updated : 17 Jan 2022 01:53 PM

பண்டித் பிர்ஜு மறைவு கதக் கலைக்கு மிகப் பெரும் இழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மறைந்த கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் படம்

சென்னை: புகழ்வாய்ந்த கதக் நடனக் கலைஞர் பண்டித பிர்ஜு மகாராஜ் மறைந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார். அவருக்கு வயது 83.

கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் நேற்றிரவு, டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, சிறுநீரகக் கோளாறு காரணமாக பண்டிட் பிர்ஜு மகாராஜ் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் ஸ்டாலின்

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "புகழ்வாய்ந்த கதக் நடனக் கலைஞர் பண்டித பிர்ஜு மகாராஜ் மறைந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

கதக் கலையின் மிகச் சிறந்த தூதராக விளங்கிய அவர் வளமான ஒரு மரபைக் கொடையாக விட்டுச் சென்றுள்ளார். அவரது மறைவு நமது நாட்டுக்கும் கதக் கலைக்கும் மிகப் பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x