

சென்னை : பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக எம்.பி. கனிமொழி அஞ்சலி செலுத்தினார்.
திமுக ஐந்தாவது முறையாக ஆட்சி பொருப்பெற்ற பின்னர் வரும் முதல் பொங்கல் தினம் என்பதால் திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, எம்பி கனிமொழியின் தந்தையும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தற்போதைய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் இல்லத்தில் உள்ள கருணாநிதி திருவுருவப் படத்திற்கும், மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.