Published : 14 Jan 2022 12:08 PM
Last Updated : 14 Jan 2022 12:08 PM

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளுடன் உற்சாகமாக தொடங்கியது: காளை அடக்கப் பாய்ந்த இளம்காளைகள்

கோப்புப் படம்

சென்னை : தமிழர் திருநாளான தைப் பொங்கலையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில், பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கரோனா கட்டுப்பாடுகளுடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் தமிழரையும், அவர்களின் வீரர்களையும் பறைசாற்றும் அடையாளமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைத்தப்படுகிறது.

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கரோனா கட்டுப்பாடுகளுடன் காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது.

அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். கோயில் காளை வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட பிறகு காளைகள் ஒவ்வொன்றாக சீறிப்பாந்தன. இதை அடக்க இளம் காளையர்களும் முயன்றனர்.

. போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் போட்டி நடைபெறும் இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x