Published : 25 Dec 2021 05:01 PM
Last Updated : 25 Dec 2021 05:01 PM

கரூர் பள்ளியில் கெட்டுப்போன முட்டை விநியோகம்: தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

முதல்வர் படம் கெட்டுப்போன முட்டை, இரண்டாம் படம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு

கரூர்: மாணவர்களுக்கு கெட்டுப்போன முட்டைகள் வழங்கிய சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் முறையாக கண்காணிக்கத் தவறிய தலைமை ஆசிரியரை ஆகியரை பணியிடை நீக்கம் செய்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள நாகனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சத்துணவு மையத்தில் மாணவர்களுக்கு நேற்று சமைத்து வழங்கப்படுவதற்காக வைத்திருந்த முட்டைகள் அழுகி, கெட்டுப்போய் அவற்றிலிருந்து புழுக்கள் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி நிற்வாகத்தினரிடம் முறையிட்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன் கிருஷ்ண ராயபுரம் ஒன்றியம் கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகி, அவற்றில் புழுக்கள் இருந்த காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இன்று (டிச. 25) நேரில் சென்று, சத்துணவிற்காக பயன்படுத்தபடும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், கெட்டுப்போன முட்டைகளை மாணவர்களுக்கு வழங்கிய விவகாரம் தொடர்பாக பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, சமையலர் லெட்சுமி, இந்தப் பணிகளை கண் காணிக்க தவறிய பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x