குறு, சிறு நிறுவனங்களின் போராட்டத்தைக் கண்டும் காணாதிருக்கும் மத்திய, மாநில அரசுகள்: கமல் சாடல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டும் காணாதிருப்பதாக மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மூலப்பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைத் தள்ளாட வைத்திருக்கின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போராட்டத்தைக் கண்டும் காணாதிருக்கும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in