28, 29-ல் ஆதிதிராவிடர் நலத்துறை கல்விப் பணியாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் பணியார்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு டிசம்பர் 28, 29-ம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’2021-2022 ம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு 28.12.2021 அன்று நடைபெறுகிறது.

பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 29.12.2021 அன்று காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் (on-line) மூலம் பணியிட மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் (on-line) கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in