தாட்கோ கடனுதவி: விண்ணப்பதாரர்களுடன் சென்னை ஆட்சியர் நேர்காணல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தாட்கோ மூலம் மானியதுடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பித்த ஆதிதிராவிடர் பனியாளர்களுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் நேர்காணல் நடைபெற்றது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

"தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற விண்ணப்பித்த ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கான நேர்காணல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயா ராணி, தலைமையில் 09/12/2021 புதன் கிழமை நேற்று நடைபெற்றது.

இந்த திட்டத்தின் கீழ் தொழில்முனைவோருக்கான கடன், வாகன கடன், சிறு தொழில் செய்யக் கடன் ஆகியவற்றிற்கான மானியத்துடன்கூடிய வங்கி கடன் பெற 110 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 93 பேர் நேர்காணலில் பங்கேற்றனர்.

விண்ணப்பித்திருந்த நபர்களின் விண்ணப்பங்கள் தொழில் குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். பயனாளிகளை தேர்வு செய்து மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற தாட்கோ மூலம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

நேர்காணலில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வருண் தீபக், தாட்கோ மாவட்ட மேலாளர் தனலட்சுமி, மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் மோசஸ் ஜெயகுமார், மகளிர் திட்ட அலுவலக கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் பல்வேறு வங்கி முதன்மை மேலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்."

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in