திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் 17-ம் தேதி நடைபெறும்: அதிமுக மீண்டும் தேதி மாற்றம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழக மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் இன்று 9.12.2021 நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், சனிக்கிழமை 11.12.2021 அன்று நடைபெறும் என நேற்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் மீண்டும் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "அதிமுக சார்பில், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் 11.12.2021 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 17.12.2021 அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in