டிசம்.10-ம் தேதி சென்னையில் எங்கெங்கு ஒரு நாள் மின் தடை?

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

டிசம்பர் 10-ம் தேதி வெள்ளிக்கிழமையில் சென்னையில் தண்டையார்பேட்டை, தாம்பரம் மற்றும் பூந்தமல்லி பகுதியில் ஒரு நாள் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"சென்னையில் 10.12.2021 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாலை 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தண்டையார்பேட்டை பகுதியில்: மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, பி.டி.ஓ அலுவலகம், ஆர்-ஆர் பாளையம் அரியன்வாயில், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, பள்ளிப்புரம், கரியான்மேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம் பகுதியில்: பெரும்பாக்கம் மெயின் ரோடு, கிருஷ்ணவேனி நகர், பாபு நகர் 3வது தெரு, விமலா நகர், சிவகாமி நகர், ஐஸ்வரியா பூங்கா மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பூந்தமல்லி வடக்கு பகுதியில்: காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு, அருணாசலம் நகர், மேட்டுபாளையம், கன்னபாலயம், ஆயில்சேரி."

குறிப்பிடப்பட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in